உதகையில் கோடை சீசன் துவங்கிய நிலையில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் ராணி உதகையில், கோடைக் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இப்பகுதிகளுக்கு
அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள், தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
தற்போதைய சீசன் காலத்தையொட்டி சாதாரண நாட்களைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை அறை ஒன்றுக்கு 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வாங்கிய விடுதிகளில் தற்போது ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு வருகை தரும் சுற்றுலா பயனிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உதகையிலுள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post