ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வசித்து வருபவர் படிக்காசு. இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர். இவருக்கு அரிசி ஆலைகள், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை திருமண மண்டபங்கள் உள்ளன. இவரது வீட்டில் மதுரையில் இருந்து வந்த நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காரைக்குடியில் உள்ள தங்கும் விடுதி, புதுவயலில் உள்ள வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கொத்தரியில் உள்ள பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை போன்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சிதம்பரத்துக்கு நெருக்கமான படிக்காசுவின் வீடு, தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version