திண்டுகல்லில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வணிக வளாகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயினுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வணிக வளாகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, பணம் விநியோகம் செய்ய முயற்சித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சோதனையையடுத்து 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post