தனி நபர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டின்போது 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் சூழலில், வரிசெலுத்தும் தனி நபர்களின் ஆதரவை கவரும் வகையில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இரண்டரை லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் தனிநபருக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
வரி விலக்கு வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் இந்த திட்டம் சமுதாயத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலில் வாக்குகளை கவர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.