ஆந்திர மாநிலத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் மற்றும் நடிகர் ராணா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ராமா நாயுடு ஸ்டுடியோ ஆகிய இடங்களில் காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தயாரிப்பாளரான சுரேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதன்படி நடிகர் வெங்கடேஷ், நடிகர் ராணா, ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் அம்மாநில சினிமா வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.
Discussion about this post