கடலூர் மாவட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில் 14 லட்ச ருபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகளை தொடங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கீரப்பாளையம், சாத்தமங்கலம், வெள்ளியக்குடி, பரிபூரணநத்தம் ஆகிய கிராமங்களின் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வரின் குடிமராமத்து பணிகள் மூலமாக 14 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டது. விவசாயிகள் ஒன்றிணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிமராமத்து பணியால் தண்ணீரை விரயமில்லாமல் சரியான முறையில் பயன்படுத்த முடியும் என்றும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version