குடிமராமத்து திட்டத்தின் கீழ், நாட்றம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் அணைக்கட்டை புனரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே.சி.வீரமணி பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், அணைக்கட்டை புனரமைக்கும் பணி விவசாய சங்கத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறித்த காலத்தில் விவசாயிகளால் பணியை முடிக்க முடியவில்லை என்றால், மாவட்ட நிர்வாகம் மூலம் உதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post