பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலக முழுவதும் பெரும்பான்மையானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் வலைதளம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று, ட்விட்டர் வலைதளம் திடீரென முடங்கியது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ட்விட்டர் சேவை முடங்கியது. இதனால், இணைய பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர், தொழில்நுட்ப காரணங்களால் வலைபக்கம் முடங்கியதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியது. அதேபோல், சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 3ம் தேதி பிரபல சமூக வலைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ஆகியவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post