அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை தட்கல் முறையில் புதிய மின் இணைப்புகள் கோரி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர், எருமப்பட்டி, மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழக முதல்வரின் நடவடிக்கையால் மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் தமிழர்களின் பெருமை வெளி உலகிற்கு தெரிய வந்திருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் பார்களின் ஏலம் வரும் 30ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத்தில் மதுக்கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களின் என்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Discussion about this post