இந்தியா மற்றும் பல நாடுகளில் இன்று சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவின் சில இடங்களில் மட்டும் முழுமையாக தெரிந்தது.
கிரகணத்தின் போது வெளியில் செல்லக் கூடாது உணவு சாப்பிடக் கூடாது என பல்வேறு வதந்திகள் பரவி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுள்ள சிறுவர்கள் சிலர் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கல்புர்கி என்கிற பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
சூரிய கிரகணத்தின் போது இப்படி செய்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படாது என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இது பற்றி பலரும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரைகளும் வழங்கி வருகின்றனர்.
Discussion about this post