தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டை ஏமாற்றுவோரின் உண்மையான முகத்தை பொதுமக்களின் முன்காட்டியதற்காக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதற்காக தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்வதாகவும் தனது முதிர்ச்சியற்ற தன்மையால் மரியாதைக்குரிய நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார். முந்தைய காங்கிரஸ் அரசுகள் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தால், விவசாயிகள் கடன் பெறும் நிலை ஏற்பட்டிருக்காது என பிரதமர் மோடி விமர்சித்தார்.
Discussion about this post