தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் திசையை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசுமாக காணப்படுகிறது. அதேவேளை விருதுநகர் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டதில் 3 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Discussion about this post