அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக வலுப்பெறும்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு தென் கிழக்கே ஆயிரத்து 210 கிலோ மீட்ட தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும்
அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக வலுப்பெறும் 30ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி ஃபானி புயல் நெருங்கும் என்றும் புயல் கடற்கரையை நோக்கி நெருங்கும்போது, மணிக்கு 125 – 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version