நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்பட்ட மாணவன் இர்பானை சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவன் இர்பான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி சேர்ந்து படித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருத்துவனை நடத்தி வரும் இர்பானின் தந்தை ஷபியை சிபிசிஐடி காவல்துறை நேற்று கைது செய்தனர். முகமது ஷபியின் சகோதரர்கள் 6 பேரும் மருத்துவர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தனது மகனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த உடன், கைது பயத்தில் மாணவன் இர்பான், மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சேலத்தில் பதுங்கி இருந்த மாணவன் இர்பானை சிபிசிஐடி கைது செய்துள்ளனர். கைதான மாணவன் இர்பானை தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.
Discussion about this post