சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூலில், சிக்கி, கழுத்து அறுப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சா நூல்களின் ஆபத்து குறித்து அறியாமல் பயன்படுத்துவதால், உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில், மஞ்சா நூலினால் சென்னையில் 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது மேலும், ஒரு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். அவருடைய மூன்று வயது மகன் அபினேஷ் ராவ். இவர்கள் இருவரும் தண்டையார் பேட்டையில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் வரும் போது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சிக்கியுள்ளது. இதில் கழுத்து அறுபட்ட சிறுவன் அபினேஷ் ராவ் ரத்தவெள்ளத்தில் துடித்து உள்ளான். உடனடியாக அவனது தந்தை கோபால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு சிறுனை கொண்டுச் சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு நிரஞ்சனா குமார், லோகேஷ், லோகநாதன், நாகராஜ் ஆகிய 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் நிரஞ்சனா குமார் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரின் அலட்சிய விளையாட்டு, பலருக்கு சோக முடிவுகளை தந்துவிடுகிறது. இந்த மாஞ்சா நூல்களால் இழக்கும் உயிரிகளின் எண்ணிக்கை இனியாவது குறையுமா?… இதன் விபரீதம் அறிந்து மாஞ்சா நூல்கள் பயன்படுத்துவதை இளைஞர்கள் தவிர்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
Discussion about this post