சட்டப்பேரவையில், இன்று செய்தி மற்றும் விளம்பரத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். செய்தி மற்றும் விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜு மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார். மாலை , பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எஸ்.வளர்மதி விவாதத்திற்கு பதில் அளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்
Discussion about this post