எகிப்து நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற இரு சாலை விபத்துகளில், இந்தியர் உட்பட 28 பேர் பலியாகினர்.
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி சென்ற 2 சுற்றுலாப் பேருந்துகள், கெய்ரோ நகரில் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இந்தியர் ஒருவர் உட்பட 2 மலேசிய நாட்டுப் பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டி, மற்றும் பாதுகாவலர் ஒருவர் என 6 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 22 பேர் பலியாகினர். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post