திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு பெண்மணி, தமது வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகளை இயற்கை உரங்கள் மூலம் வளர்த்து அசத்தி வருகிறார்..
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ராமசாமி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சௌமியா நிவாசி. இயற்கை மூலிகை செடிகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சௌமியா நிவாஸினி தன்னுடயை வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் அதாவது டீ கடைகளில் கொட்டபடும் தேவையற்ற டீ த்தூள் மற்றும் காய்கறி கழிவுகள் ,மாட்டு சாணம் போன்றவற்றை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கிறார்.
இதன் மூலம் பல வகையான மூலிகை செடிகளை வீட்டை சுற்றி வளர்த்துவருகிறார். ஆடுதொடா தலை ,சிறியா நங்கை, பெரியா நங்கை, லெமன் கிராஸ் சிறுகுறிஞ்சான், கருந்துளசி ,தொட்டாசினிங்கி, நாயுருவி செடி ,திருநீர் பத்தினி வெத்தலை செடி, கருநொச்சி ,பிரண்டை போன்ற 60 வகை யான மூலிகை செடிகளை வளர்தது ஆச்சர்யப்பட வைக்கிறார்.
பயன்படாத பிளாஸ்டிக் டப்பாக்களையும் செடிகள் வளர்க்க பயன்படுத்திக்கொண்டுள்ளார். எதிர்கால சந்ததி நன்றாக இருக்க, அனைவரும் இதுபோன்ற இயற்கை முறைக்கு மாற வேண்டும் என சௌமியா நிவாஸினி கேட்டுக்கொண்டார்.
Discussion about this post