ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தில் பீமா என்கிற 4 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினர் தகவல் அளித்தனர். விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர், 15 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் குழுவும் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில், 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திமராக மீட்கப்பட்டான். மீட்பு பணி நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் மருத்துவக் குழுவினர் சிறுவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவன் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post