சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 180 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.
சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, பசுமைவழிச் சாலை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இளைஞர்கள் பைக்ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மட்டும், சுமார் 180 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். அவர்கள் மீது, வாகனத்தை அதிவேகமாக இயக்கியது, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கியது மற்றும் மது போதையில் வாகனம் ஒட்டியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும், நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்திய பின்னரே வழங்கப்படும் எனக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post