தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் மின்கேபிள்கள் புதைவட பாதையில் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும், விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று துவங்கியதும் கேள்வி நேரத்தின்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கோவையில் புதைவட கேபிள் பதிக்க பணிகள் துவங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஈரோட்டில் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி ஒதுக்கி புதைவட கேபிள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.இதனிடையே, கஜாபுயல் பாதிப்பின்போது சிறந்த முறையில் பணியாற்றிய மின்ஊழியர்களின் பணிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் புத்தகமாக அச்சடிக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு சபாநாயகர் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post