சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்தியாவிலேயே ஊரகப் பகுதிகளில் தமிழகத்தில் மட்டுமே 99 புள்ளி ஒன்று ஒன்று சதவீதம் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் தினந்தோறும் குடிநீர் திட்டங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post