அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றில் ஈரப்பதம் காரணமாக காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் சூரிய ஒளி வந்தபிறகு பனிமூட்டம் தணிந்து விடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
Discussion about this post