விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மர்மநபர்கள் வைத்த விஷத்தை தின்ற 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. தமிழக அரசு, பயனாளிகளுக்கு வழங்கிய விலையில்லா ஆடுகளை பொதுமக்கள் மேய்சலுக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே அடுகள் இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் அரிசியில் விஷம் கலந்து ஆடுகளுக்கு வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post