புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள் வழங்காததாலும், போதிய ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்காததாலும் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறத்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர்களுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை. பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதாகவும், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாததால் இதுவரை ஒரு பாடம் கூட நடத்தபடாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post