புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் மக்களவை தொகுதி மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றம் துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி அருண், புதுச்சேரியில் சிசிடிவி பொருத்தாத மதுபான குடோன்கள், வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33 பறக்கும் படைகள், 102 செக்டார் அதிகாரிகள் மற்றும் 14 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் 24 மணிநேமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
Discussion about this post