வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தேனி, கோவை, நீலகிரி, மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னகல்லாறில், 5 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழையும், மற்றும் கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சி பாறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் இந்த பகுதிகளுக்கு இன்றும், தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Discussion about this post