பாகிஸ்தானில் சீக்கியப் பெண் ஒருவர் கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் சீக்கியர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினரும் துணைராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Discussion about this post