நவம்பர் மாதத்தில் சரக்கு சேவை வரி மூலம் ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது.
சரக்கு சேவை வரி மூலம் மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் சரக்கு சேவை வரி மூலம் ஒரு லட்சத்து மூவாயிரத்து 492 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்திய பின் மாத வரி வருவாயில் இது மூன்றாவது பெரிய தொகையாகும். இந்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாயாகக் கிடைத்தது குறிப்பிடத் தக்கது. அதன்பின்னர் கடந்த ஆறு மாதங்களாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் வரி வருவாய் குறைந்துவிட்டது. ஆறு மாதத்துக்குப் பின் சரக்கு சேவை வரி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post