திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் கிராம விவசாயிகள், இயற்கையான முறையில் உரங்கள், பூச்சி விரட்டி மற்றும் நுண்ணுயிர் ஊட்டசத்துக்களை விவசாயத்திற்கு பயன்படுத்தி, அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர். அது குறித்த தொகுப்பு
பால், நெய், தயிர், சாணம், இளநீர், கோமியம், மண்டை வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றை பயன்படுத்தி, பஞ்சகவ்யம் என்னும் பொருள் தயாரிக்கபடுகிறது. இந்தக் கரைசலில், 16 வகையான நுண்ணூட்டச் சத்துக்கள் கலந்துள்ளன. இதனை விவசாயத்திற்கு பயன்படுத்துவதன் மூலம், மண் வளமும் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிவிரட்டிகளுக்கு பதிலாக, எளிதில் கிடைக்கக் கூடிய இஞ்சி, மிளகாய், பூண்டு ஆகியவற்றைக் கொண்டு, இயற்கையான முறையில் பூச்சி விரட்டிகளை தயாரிக்கின்றனர். இந்த பூச்சி விரட்டிகள், எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தருகின்றன.
இதேபோல் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக, இலை சத்துக்களான புங்கை, நொச்சி, வேப்ப இலை, காட்டாமணக்கு, எருக்கலை, வாய் பூண்டு போன்றவைகளை அத்துடன் கலந்து, அதை பயிர்களுக்கு தெளிக்கும்போது, அது மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாக மாறுகிறது. மேலும், மண்புழு உரம் தயாரிப்பதற்காக, விவசாயிகள் மாடுகளின் காய்ந்த சாணத்தைப் பயன்படுத்தி, மிகச்சிறப்பான முறையில் மண்புழு உரம் தயார் செய்கின்றனர். இந்த உரம் தயாரிக்கும் போது, தண்ணீர் அவ்வப்போது தெளிக்கிறார்கள்.
நுண்ணுயிர்களை பெருக்குவதற்காக, ஜீவாமிர்தம் என்று சொல்லக்கூடிய உரங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ஜீவாமிர்த உரமானது, நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கடலைமாவு, சாணம், கோமியம், மண்டலம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
மேலும் இதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் நடுவை இயந்திரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த நடவு இயந்திரத்தை விவசாயிகள் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகிறார்கள். இவர்களுடைய முக்கிய நோக்கம் ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதுமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி வருங்கால சந்ததியினரின் காப்பதே இவருடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. மேலும் ரசாயன உரங்களை விட இந்த இயற்கை உரங்களை பயன்படுத்த செலவு மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post