மும்பையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மும்பையில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. வழிபாட்டிற்காக மும்பை முழுவதிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விநயாகர் சிலைகளுக்கு 10 நாட்களும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாட்டிற்கு பிறகு லால்பாக் ராஜா என்ற பிரமாண்ட விநாயகர் சிலை உட்பட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கபப்ட்டன. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
Discussion about this post