மெக்சிகோவின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமானநிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ (AERO MEXICO) என்ற விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானம் திடீரென விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்த, விமானி சாதூர்யமாக, விமானத்தை, விமானநிலையத்திற்கு அருகேயுள்ள புற்கள் நிறைந்த பகுதியில் தரையிறக்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
மெக்சிகோவில் விமான விபத்து – 101 பயணிகள் உயிர் தப்பினர்
-
By Web Team

- Categories: உலகம்
- Tags: மெக்சிகோவிமான விபத்து
Related Content
மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய திருவிழா
By
Web Team
December 27, 2019
மெக்சிகோவில் களைகட்டும் பேய்த் திருவிழா
By
Web Team
October 22, 2019
தடுப்பு வேலிக்கிடையில் சீசா வைத்து விளையாடும் அமெரிக்க-மெக்சிகோ மக்கள்
By
Web Team
August 2, 2019
சுவருக்கான நிதியைப்பெற அமெரிக்காவில் அவசர நிலை பிரகடன முடிவு
By
Web Team
February 16, 2019
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி பலி
By
Web Team
January 19, 2019