மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 930 உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 23 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 214 பேரும், 420 கிராம ஊராட்சி தலைவர்களும், 3 ஆயிரத்து 273 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மதுரையிலுள்ள 13 ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பஞ்சாயத்து செயல் அலுவலகங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
மாவட்டத்தில் 16 ஆயிரம் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 27ம் தேதி 7ஒன்றியங்களுக்கும், 2ம் கட்டமாக 30ம் தேதி 6 ஒன்றியங்களுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் 2 ஆயிரத்து 32 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 37ஆயிரத்து 13 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 48 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 24 பேர் இதர வாக்காளர்கள் என மாவட்டத்தில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 317 வாக்களர்கள்
உள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நிலையில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post