இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் என்றார். அதிமுகவால் மட்டுமே நல்ல திட்டங்களை தர முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருப்பதாக அமைச்சர் கூறினார்.
Discussion about this post