கொடைக்கானலில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பைன் மரக்காடுகள், குணாகுகை, பேரிஜம் ஏரி, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் செல்ல தடைவிதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தலங்களான பேரிஜம் ஏரி, மோயார் பாயின்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. இந்தநிலையில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி, 29, 30ம் தேதிகளில் இந்த சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post