இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மிக அதிகபட்சமாக 162 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2000ம் ஆண்டு முதல் 2015 வரையில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் 2018ல் வழங்கப்பட்ட தூக்கு தண்டனைகள் குறித்த புள்ளி விவரத்தை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விசாரணை நீதிமன்றங்கள் 162 தூக்கு தண்டனைகளை வழங்கியுள்ளன. இவற்றில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட 12 வழக்குகளில் 11 வழக்குகளில் தீர்ப்பு உறுதி செய்யப்ப்டடுள்ளது. உயர் நீதிமன்றங்களால் 55 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 24 வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களை பொருத்த வரை அதிகமாக மத்திய பிரதேசத்தில், 22 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த ஆண்டில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தூக்கு தண்டனை விதிப்பது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post