முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116ஆவது பிறந்த நாளையொட்டி டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜவகர்லால் நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே, உள்துறை, வெளியுறவுத்துறை ஆகிய பொறுப்புகளில் இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. நேரு மறைவுக்குப் பின் 1964 முதல் 1966 வரை நாட்டின் இரண்டாவது பிரதமராகப் பிரதமராகவும் சாஸ்திரி பதவியில் இருந்தார். அவரது 116ஆவது பிறந்த நாளையொட்டி டெல்லி விஜய்காட்டில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post