சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தோட்டக்கலைத்துறை மானியம் மூலம் வெள்ளரி உற்பத்தியில் இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள சேவினிப்பட்டி கிராமத்தில் தேசியத் தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2018-2019 திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டரில் பசுமை குடில் அமைத்து வெள்ளரிப் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் முதல் ஆண்டிலேயே 2 முறை பயிர் சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் இளைஞர்கள், படித்த இளைஞர்கள் அரசு திட்டங்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
Discussion about this post