தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதில் இணைந்து செயல்பட இந்தியா, மொராக்கோ நாடுகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அரசு முறை பயணமாக மொராக்கோ சென்றுள்ளார். அங்கு அவர் மொராக்கோ நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டது. வர்த்தகம், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 37 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Discussion about this post