கோவையில் கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர்கள் மூன்றுபேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள சின்னதடாகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர்கள், சின்னதடாகம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் 2 பேரிடம் விசாரித்த போது அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்துக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ், தொப்பமந்து மாலிக் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி காசி டிஜால் என்பவனையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post