தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் மாவட்டங்களைப் பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலையைப் பொருத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post