தமிழக அரசின் சீறிய நடவடிக்கையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மண்டல வாரியாக உயர்ந்துள்ள நீரின் அளவினை குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனாம்பேட்டையில் செப்டம்பரில் 5.98 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் அக்டோபர் மாத முடிவில் 1.06 அதிகரித்து 4.92 மீட்டரில் உள்ளது. இதேபோல், கோடம்பாக்கம், அண்ணா நகர், திருவிக நகர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூரில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடையாறு, பெருங்குடியிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதை புள்ளி விவரங்களுடன் குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
Discussion about this post