கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப் பகுதிகள் தீக்கரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சில்மார் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக வனப்பகுதியின் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதிகள் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டம் நிலவியதால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதிக வெப்பம் காரணமாக தீ பற்றியிருக்க கூடும் என கூறப்படும் நிலையில், தற்போது வரை 7 ஆயிரத்து 542 ஏக்கர் காட்டுப் பகுதி தீக்கிரையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post