கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தனாரிபாளையத்தில் அரிசிராஜா யானை இருப்பதை கண்டுபிடித்துள்ள வனத்துறையினர், மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அர்த்தனாரி பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி வந்த அந்த யானை வீடுகளில் புகுந்து அரிசியை மட்டும் தின்று வந்ததால், அதற்கு அரிசி ராஜா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஊருக்குள் புகுந்த காட்டுயானை அரிசிராஜா தாக்கியதில் ஒருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் காயமடைந்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று யானையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் 3 குழுக்களாக வனத்துறையினர், யானைக்கு பிடித்தமான அரிசியை வைத்து பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து யானையை கண்டிபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், அரிசி ராஜாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். செருப்படி பாறை பகுதியில் யானை உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post