ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
அந்த அறிக்கையில், வேதாந்தா குழுமம் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும், ஆலையை மூடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் நியாயப்படுத்தும் வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க பசுமைத் தீர்ப்பாயம் கருதுவதாக இருந்தால் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.
Discussion about this post