வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி செய்து விவசாயி ஒருவர் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் தன் நிலத்தில் இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு போக 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும், வெண்டைக்காய் சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் நல்ல விளைச்சல் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post