தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வரும் நடுக்காட்டுபட்டியில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்றும், ஆனால் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அடுத்து இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post