கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜராகவில்லை..
கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுகவின் தோழமை கட்சிகள் பேரணி நடத்தினர். பேரணியினர் தடையை மீறி சென்றதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஸ்டாலின் உட்பட 7 பேரும் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றத்தில், கராத்தே தியாகராஜன், திருமாவளவன் ஆகியோர் ஆஜரான நிலையில், ஸ்டாலின் ஆஜராகவில்லை. அவரது சார்பில் அவரது இரு வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதம் 17-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. .
Discussion about this post