உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட ஆலோசனையில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், அதிகாரிகள் மற்றும் வாக்குசாவடி மையங்கள், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலோசனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post