தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்துவதில் மோடியுடன் மீண்டும் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாக இம்ரான் கான் கூறினார்.
Discussion about this post